Search This Blog

Thursday, 12 December 2013

FACTORIES ACT   EL - 30 நாள் குறித்த 
MINISTRY OF DEFENCE ன்  உத்தரவு


தோழர்களே,

                            FACTORIES ACTல் LEAVE எடுப்பவர்களுக்கு ஆண்டிற்கு 30 நாட்கள்  LEAVE வழங்க பாதுகாப்பு அமைச்சகம்  04-10-2013   இல் உத்தரவு வெளியிட்டு  இருந்தது.  இந்நிலையில் PC of A எழுப்பிய விதண்டாவாத கேள்விக்கு விடையாக, 20-07-1998   இல் இருந்து   30 நாட்கள் விடுப்பு அமலில் உள்ளதாக நமது AIDEF சம்மேளனம் முன் வைத்த வாதத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருந்தது.

                              இன்று 12-12-2013 டெல்லியில் நடைபெற உள்ள பாரளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணிக்காக, டெல்லியில் முகாமிட்டு இருந்த சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் C.ஸ்ரீகுமார் அவர்களின் நேரடி முயற்சியால் பாதுகாப்பு அமைச்சகம் 20-07-1998இல்  இருந்தே 30 நாட்கள் EL விடுப்பு அமலில் உள்ளதாக உத்தரவு வெளியிட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.