7 வது ஊதியக்குழுவுடன்
AIDEF சம்மேளன பிரதிநிதிகள் சந்திப்பு:
27.05.2014 அன்று புதுதில்லியில் ஹோட்டல் ஜன்பத்தில் அமைந்துள்ள 7-வது ஊதியக்குழுவின் முகாம் அலுவலகத்தில் ஊதியக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. திரு. அசோக்குமார் மாத்தூர் மற்றும் உறுப்பினர்கள் திரு. விவேக்ராய், டாக்டர் ரத்தின் ராய், திருமதி. மீனா அகர்வால் (செயலர்) உடன் சம்மேளனத் தலைவர் தோழர். S.N. பாதக், பொதுச்செயலாளர் ஸ்ரீ.குமார், இணைப்பொதுச் செயலாளர். குஹா தாகூர்தா மற்றும் சம்மேளன நிர்வாகிகள் தோழர். ராஜேந்திர ஜா, தோழர்.கே. பாலகிருஷ்ணன், தோழர். R.S. ரெட்டி ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சக பிரிவின் பல்வேறு செயல்பாடுகள், பாதுகாப்பு சிவிலியன் தொழிலாளர்கள் பணிநிலை சம்மந்தமாகவும் விளக்கப்பட்டது.
(i). 6-வது ஊதியக்குழு அமுலாக்கத்தில் PB-1 மற்றும் PB-2 வில் உள்ள குறைபாடுகள் (Disparity) குறித்தும், இதனால் பெரும்பான்மையான PB-1 மற்றும் PB-2 - வில் உள்ள பாதுகாப்பு சிவிலியன் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய சம்மேளனம் கோரியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக ஊதியக்குழு உறுதி கூறியுள்ளது.
(ii). நடைமுறையில் உள்ள MACP குறைபாடுகள் குறித்தும், பல்வேறு நிலைகளில் குறிப்பிட்ட கால பதவி உயர்வு இல்லாமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரிவான தகவல்களை Memorandum வாயிலாக அளிக்க ஊதியக்குழு கோரியுள்ளது.
(iii). Service Condition உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளில் தொழிலாளர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வரை பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்தாமலும், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசின் முடிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பிட்ட நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி எழுத்துபூர்வ விளக்கத்தை Memorandum வாயிலாக அளிக்குமாறு ஊதியக்குழு கோரியுள்ளது.
(iv). 1.1.2004 முதல் பணிக்கு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பொதுவான பழைய பென்சன் திட்டத்தை தொடர ஊதியக்குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என சம்மேளனம் கூறியுள்ளது.
(எ). 50 % அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இனைக்கவும் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்கவும் சம்மேளனம் கோரியுள்ளது. விரிவான விவாதத்திற்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவான Common Memorandum National Council JCM சார்பாக 30.06.2014 க்கு முன்னரும், பாதுகாப்பு சிவிலியன் தொழிலாளர் சம்மந்தப்பட்ட Memorandum சம்மேளனத்தின் சார்பாக 31.07.2014 க்கு முன்னரும் சமர்ப்பிக்க ஊதியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
சம்மேளனத்தின் செயலகக் கூட்டம் ஜீலை 18,19 தேதிகளில் Central Office, Pune வில் நடைபெறும். அதை தொடர்ந்து ஜுலை 20, 21 தேதிகளில் நடைபெறும் சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட உள்ள Memorandum இறுதி செய்யும் பணி நடைபெறும்.
இதில் AIDEF உடன் இணைக்கப்பட்டுள்ள சங்கங்கள் தங்களின் ஊதியக்குழு தொடர்பான ஆலோசனைகளை வழங்க சம்மேளனம் கோரியுள்ளது.