பிப்ரவரி17 முதல்
அகில இந்திய காலவரையற்ற
வேலை நிறுத்தம்
தோழர்களே,
பாதுகாப்புத் துறை ஊழியர்களின் ஜீவாதாரமான 25 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AIDEF,INDWF,BPMS சம்மேளனங்கள்
அறைகூவல் விடுத்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நமது தொழிலகத்தில் வெற்றிகரமாக நடத்திட அனைத்து தொழிச்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வேலை நிறுத்த வாக்கெடுப்பு நடத்திய
OFTEU, NDWU, OFWPU, KPTS ஆகிய சங்கங்களின் சார்பாக வேலை நிறுத்த
நோட்டீசும், OFAEU, AICLF, AWU ஆகிய சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு
தார்மீக ஆதரவு தருகின்ற கடிதத்தையும் சம்மேளனங்கள் முன்வைத்துள்ள நாளான 03-02-2014 காலை பொதுமேலாளரை சந்தித்து வழங்குவது என்றும்,
அன்று காலை 07.00 மணிக்கு அனைத்து தொழிச்சங்கங்களின் வேலை நிறுத்த
கோரிக்கை விளக்க நுழைவாயில் கூட்டம் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
கூட்டுக்குழு